Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை - ரிசர்வ் வங்கி அதிரடி

வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை - ரிசர்வ் வங்கி அதிரடி
, சனி, 21 அக்டோபர் 2017 (12:01 IST)
பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.


 

 
ஆதார் எண்ணுடன் சில ஆவணங்களை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த இணைப்பிற்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
 
வங்கி கணக்குகள் , பான் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை , எல்பிஜி கேஸ் இணைப்பு, டிரைவிங் லைசென்ஸ், மொபைல் எண் ஆகிய அனைத்துடன் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
 
அதேபோல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லையேல், வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்களும் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு செய்தி இணையதளம், தகவல் உரிமை சட்டத்டின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் ஆதார் எண்ணை இணப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

webdunia

 

 
அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், புதிய கணக்கு தொடங்குபவர்கள் தங்களின் ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை” என அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 
எனவே, வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவுதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பராசக்தி இப்போது வெளியானால்? -ப.சிதம்பரத்திற்கு ஹெச்.ராஜா பதில்