Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான NET தேர்வு! – விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

UGC NET
, ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (10:03 IST)
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான நெட் தேர்வு விண்ணப்பிக்கும் தேதி, தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிகளில் சேர NET (National Eligibility Test) தேர்வு UGC அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நெட் தேர்வுக்கான விவரங்களை யூஜிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி, Junior Research Fellowship மற்றும் Assistant Professor தகுதிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 28ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தேர்வு கட்டணத்தை செலுத்த அக்டோபர் 29ம் தேதி கடைசி நாள்.

நவம்பர் இறுதி வாரத்தில் தேர்வு நடைபெறும் நகரங்கள் விவரம் வெளியிடப்படும். டிசம்பர் முதல் வாரத்தில் ஹால் டிக்கெட்டை தரவிறக்கிக் கொள்ளலாம். டிசம்பர் 6 முதல் டிசம்பர் 22 வரை தேர்வுகள் நடைபெறும். எந்தெந்த பாடங்களுக்கு எப்போது தேர்வு என்பது ஹால் டிக்கெட்டில் இடம்பெறும்.

இதுகுறித்த மேலதிக விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரட்டாசி விரதத்தால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்! – கிலோமீட்டர் கணக்கில் க்யூ!