Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலையில் குண்டு தூக்கி போட்ட அரசு: 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கு தடை

தலையில் குண்டு தூக்கி போட்ட அரசு: 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கு தடை
, வெள்ளி, 14 டிசம்பர் 2018 (17:55 IST)
இப்போதுதான் 5 மாநில தேர்தலில் பாஜக கடும் சரிவை சந்தித்தது அதற்குள் ரூபாய் நோட்டுகளுக்கு தடையா என எண்ண வேண்டாம். 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கு தடை போட்டுள்ளது நேபாள அரசு. 
 
ஆம், இந்திய அரசின் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளது. ஆனால், 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய போது நேபாளத்தில் கோடிக்கணக்கில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தேங்கிவிட்டன. இதனை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்ப பெறவில்லையாம். 
 
இதனால், கடும் அதிருப்தியில் உள்ள நேபாள அரசு உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளான ரூ.2000, ரூ.500 மற்ரும் ரூ.200-க்கு தடை விதித்து ரூ.100 மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. 
 
இந்த திடீர் அறிவிப்பால் இந்தியாவில் பணியாற்றும் நேபாளர்களும்  நேபாளத்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை – தமிழக இளைஞருக்கு 9 ஆண்டு சிறை