Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்விட்டருக்கு போட்டியாக ஆரம்பித்த ‘கூ’ நிறுவனம்.. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறல்..!

ட்விட்டருக்கு போட்டியாக ஆரம்பித்த ‘கூ’ நிறுவனம்.. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறல்..!

Mahendran

, வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (18:03 IST)
ட்விட்டருக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ‘கூ’ என்ற நிறுவனம் ஊழியருக்கு சம்பளம் கூட தர முடியாமல் பொருளாதார கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் ட்விட்டர் போன்ற ஒரு சில சமூக வலைதளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ‘கூ’ என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்நிறுவனம் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கூட வழங்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த 2022 ஆம் ஆண்டு ‘கூ’ தளம் ஆரம்பிக்கப்பட்ட போது 94 லட்சம் பயனாளர்களை கொண்டிருந்தது என்றும் ஆனால் படிப்படியாக பயனர்களின் எண்ணிக்கை சரிந்து கொண்டே வந்த நிலையில் இதன் வருமானமும் மிகவும் குறைந்தது என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கவில்லை என்று தகவல் வெளியான நிலையில் இதனை ‘கூ’ தரப்பும் உறுதி செய்துள்ளது. புதிதாக மூலதனத்தை திரட்டும் நோக்கில் தோல்வி அடைந்து விட்டதாகவும் அதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றும் இருப்பினும் தங்கள் தளத்தின் இயக்கம், செயல்பாடுகள் முடங்காது என்றும் ‘கூ’ தெரிவித்துள்ளது

ஏற்கனவே இந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் 60 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாகவும் ஆனால் அவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலை தான் தற்போது உள்ளது என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..!!