Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முஸ்லிம்களுக்கு ஒபிசி ஒதுக்கீடு வழங்கியது சமூக நீதிக்கு எதிரானது: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்ப்பு

Reservation

Siva

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:26 IST)
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு ஒபிசி பிரிவில் பட்டியல்  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ள நிலையில் இந்த முடிவுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

'முஸ்லிம்களில் உள்ள அனைத்து சாதியினரையும் பின்தங்கிய வகுப்பினராக கருத முடியாது என்றும்,  முஸ்லீம்கள் அனைவரையும் பின்தங்கியவராக கருதி, ஒபிசி பிரிவில் சேர்த்தது சமூக நீதிக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் முஸ்லிம் மதம் சாதி அமைப்பை ஏற்கவில்லை என்றாலும், அம்மதத்திலும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சாதிகள் இருப்பதாகவும், முஸ்லிம் மதம் முற்றிலும் சாதி கொடுமைகளில் இருந்து விடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதியினரையும், வேறொரு மதத்தை சேர்ந்த அனைத்து சாதிகளையும் சமமாக கருத முடியாது என்றும் அவ்வாறு செய்வது பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உரிமைகளைப் பறிப்பதற்கு சமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

26,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது: மம்தா பானர்ஜி