Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் 8 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்! – மீண்டும் உயரும் கொரோனா!

இந்தியாவில் 8 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்! – மீண்டும் உயரும் கொரோனா!
, சனி, 11 ஜூன் 2022 (09:18 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த கொரொனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,32,13,435 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,757 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,26,48,308 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 40,370 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரக்கு பாட்டில் போல இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் வாசகம்! – கனடா அரசு முடிவு!