Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

85வது நாளாக தொடரும் ஊரடங்கு உத்தரவு

85வது நாளாக தொடரும் ஊரடங்கு உத்தரவு
, சனி, 1 அக்டோபர் 2016 (12:46 IST)
காஷ்மீரில் தொடரும் பதற்ற சூழலை அடுத்து, 85வது நாளாக சில இடங்கலில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் தளபதி புர்ஹான் வானி உட்பட மூன்று பேர், கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. 
 
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இதனால் கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவை அடியோடி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சில இடங்களில் உத்தரவு தளர்த்தப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் இயல்பு நிலை மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது.
 
இதற்கிடையில் பிரிவினைவாதிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தனர். இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் தளம்? : பரபரப்பு வீடியோ