Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்: முதல்வர் தகவல்

உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்:  முதல்வர் தகவல்

Mahendran

, திங்கள், 29 ஜனவரி 2024 (17:12 IST)
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது ஆகிய வாக்குறுதிகளை பாஜக கொடுத்த நிலையில் இரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது 
 
இந்த நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக இந்த சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே பொது சிவில் சட்டம் நடவடிக்கை அமல்படுத்தப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்பர் சிங் தாமி என்பவர் தெரிவித்துள்ளார்.  
 
இதன் மூலம்  உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில முதல்வர் தீவிரமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தசட்டம் அமல்படுத்தப்பட்டால் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை தத்தெடுத்த அனைத்து அவர்களின் மத வேறுபாடு இல்லாமல் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் அமல்படுத்த இந்த சட்டம் வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரி தலைமைச் செயலாளர் மாற்றம்.! மாவட்ட ஆட்சியரும் அதிரடியாக மாற்றம்.!!