Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநிலங்களவை துணைத் தலைவர் போட்டி - பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி

மாநிலங்களவை துணைத் தலைவர் போட்டி - பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி
, வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (12:57 IST)
மாநிலங்களவை துணைத்தலைவர் போட்டியில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1 ந் தேதியுடன் பாராளுமன்றத்தில் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக் காலம் நிறைவு பெற்றது. அடுத்த துணைத்தலைவருக்காக தேர்தல் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
webdunia
இந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார். இதனால் ஹரிவன்ஷ்  20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஹரிவன்ஷ்-க்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி, ஜெயலலிதா மறைவில் ஒரு ஒற்றுமை : என்ன தெரியுமா?