Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச வீடியோ சர்ச்சை; பாஜக வேட்பாளரின் திடீர் முடிவு

upendra singh rawat

Sinoj

, திங்கள், 4 மார்ச் 2024 (19:20 IST)
பாஜக வேட்பாளர் உபேந்திரசிங் தேர்தல் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த   நிலையில், பாஜகவில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் இணைந்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரரும் டில்லி கிழக்கு தொகுது எம்பியுமான கவுதம் காம்பீர்  தீவிர அரசியலில் இருந்து விலகி, கிரிக்கெட் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதனால் அரசியல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்க பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இதனைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநில மக்களவை எம்பி ஜயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகி, காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், மேலும் ஒரு பாஜக வேட்பாளர் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேசம் - பாராபங்கி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உபேந்திர சிங் ராவத்தின் ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில்,  தான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
 
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவில் இருந்து முக்கிய எம்பிக்கள் மற்றும் பிரபலங்கள் விலகுவது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 8-ல் ஈஷா மஹாசிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்! - குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் பங்கேற்பு!