Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசால் நாடு முழுவதும் 48,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

மத்திய அரசால் நாடு முழுவதும் 48,000 பேர் வேலையிழக்கும் அபாயம்
, சனி, 24 பிப்ரவரி 2018 (18:28 IST)
ஆதார் பொது சேவை மையங்களின் ஒப்பந்தத்தை புதுபிக்கும் முடிவை ஆதார் தவகல் சேகரிப்பு அமைப்பு கைவிட்டத்தால் நாடு முழுவதும் 48,000 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 
தேசிய டிஜிட்டல் திட்டங்களை செயல்படுத்த சிஎஸ்சி என்ற அமைப்பு 2006 ஆண்டு மத்திய அரசுடன் கைக்கோர்த்தது. குறிப்பாக ஆதார் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது இந்த சிஎஸ்சி அமைப்புதான்.
 
இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான பொது சேவைகள் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த பொது சேவை மையங்களில் பலர் பணியாற்றி வருகின்றனர். 
 
ஆதார் தகவல்கள் கசிந்து வருவது குறித்து தொடர்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆதார் தகவல்கள் கசிவதை தடுக்க ஆதார் தவகல் சேகரிப்பு அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சிஎஸ்சி அமைப்புடன் ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முடிவை கைவிட்டுள்ளது.
 
இதனால் நாடு முழுவதும் சுமார் 48,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎஸ்சி நிர்வாக சேவை தலைமை செயல் அதிகாரி தினேஷ்குமார் கூறியதாவது:-
 
ஆதார் தகவல்கள் கசிவுக்கும் இந்த மையங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒவ்வொரு பொது சேவை மையத்திலும் சுமார் 4 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு மையத்திற்கும் கம்யூட்டர், பயோ மெட்ரிக் எந்திரங்கள், டேப்லட்ஸ் உள்ளிட பொருட்கள் வாங்க ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் தகவல்கள் சேகரிப்பு மையம், அதிக முறைகேடு புகார், எண் சேர்க்கையில் விதிமீறல் போன்ற காரணங்களால் சிஎஸ்சி நிர்வாகத்தின் ஒப்பந்தங்களை மீண்டும் புதுபிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் பக்கம் பிரபு எம்.எல்.ஏ ; விரைவில் ஆட்சி மாற்றம் : செந்தில் பாலாஜி பேட்டி (வீடியோ)