Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம் லேண்டரின் ரோவர் எடுத்த 3டி போட்டோ -இஸ்ரோ வெளியீடு

Isro -vikram lander 3 d photo
, செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (20:02 IST)
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்த விக்ரம் லேண்டரின்  3டி போட்டோவை இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3,வெற்றிகரமாக செயல்பட்டது என்பதும் நிலவில் தற்போது சூரிய வெளிச்சம் இல்லை என்பதால் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில்,  நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்த விக்ரம் லேண்டரின்  3டி போட்டைவை இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சாப்ட் லேண்டிங் முறையில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர்,  நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து வரும் நிலையில், அதிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவின் பல தனிமங்கள் மற்றும் ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்தது.

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில், சூரிய பேனல்கள் மூலம் விர்கன் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை செயல்பட்டு வரும் நிலையில், இவற்றில் இருந்து டேட்டோக்கள் பெறப்பட்டு, அவை உறங்கும் நிலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.  மீண்டும் நிலவில் பகல் வரும்போது அவரை வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி மீண்டும் இயங்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,’’ விக்ரம் லேண்டரில் 3 டி போட்டோவை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அனாக்லிப் –ஸ்டீரியோ அல்லது மல்டிவியு எனும் 3டி வழியாக  குறிப்பிட்ட பொருட்களை காண்பதாகும். பிரக்யான் ரோவர்  NavCam மூலம், கடந்த 30 ஆம் தேதி இப்புகைப்படத்தை எடுத்தது’’ என்று இஸ்ரோ பதிவிட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர் தினத்தில் ஆசிரியரின் மூக்கை உடைத்த மாணவன்