Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் ஜப்பான் படம் தேறுமா? திரைவிமர்சனம்..!

கார்த்தியின் ஜப்பான் படம் தேறுமா? திரைவிமர்சனம்..!
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (15:49 IST)
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படம்  எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கே எஸ் ரவிக்குமார் என்ற அரசியல்வாதிக்கு சொந்தமான நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகையை ஜப்பான் என்ற கார்த்தி திருடுகிறார் இதனால் அதிர்ச்சி அடையும் கே எஸ் ரவிக்குமார் காவல்துறையை அனுப்பி ஜப்பானை பிடிக்க உத்தரவிடுகிறார். ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.  

தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். முதல் பாதி முழுவதும் கார்த்தியை வைத்து நகைச்சுவையாக கதையை நகர்த்தி விட்ட நிலையில் இரண்டாம் பாதியில் தான் சீரியஸாக கதைக்கு வந்துள்ளார்.  

கார்த்தி காமெடி மற்றும் ஆக்சன் காட்சிகளில் ஓகே என்றாலும் அவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படத்தில் அவரது நடிப்பு சுமார் தான். அனு அகர்வால் இந்த படத்தின் நாயகி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை சந்திரசேகர், சுனில், விஜய் மில்டன், கேஎஸ் ரவிகுமார் நடிப்பும் சுமார் தான்.

ஜிவி பிரகாஷ் இசை மற்றும் பின்னணி இசை ரொம்ப சுமார்  மொத்தத்தில் ஜிப்ஸி போன்ற கமர்சியல் அல்லாத படங்களை எடுத்து நல்ல பெயரை பெற்ற ராஜு முருகன் இந்த படத்தில் கமர்சியல் வளையத்துக்குள் சென்று விட்டதாகவே கருதப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தை தீபாவளி அன்று பார்க்கும் அளவுக்கு நல்ல படம் இல்லை என்பதும் ஓடிடியில் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் தான் படத்தின் தரம் உள்ளது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட்!