Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
, வியாழன், 5 செப்டம்பர் 2013 (10:31 IST)
படத்தை வாங்கியவர்களும் எந்த வருத்தமும் இல்லாமல் ரிலாக்சாக இருக்கிறார்கள். காரணம் சிவ கார்த்திகேயன். இவரின் காமெடிப் படங்கள் வெற்றி பெற்றதால் இளைஞர்கள் மத்தியில் சிவ கார்த்திகேயன் என்றால் வரவேற்பு இருக்கிறது. முக்கியமான இன்னொரு காரணம், படத்தின் டீம்.
FILE

படத்தை இயக்கியிருக்கும் பொன்ராம் ராஜேஷ் எம். மின் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.

இந்தப் படத்துக்கு ராஜேஷ் எம். தான் வசனம் எழுதியுள்ளார். தேசிங்குராஜாவில் அடித்துக் கிளப்பிய பரோட்டா சூரிதான் இதிலும். எல்லாவற்றுக்கும் மேல் சத்யராஜ் இருக்கிறார்.
webdunia
FILE

சிவ கார்த்திகேயனுக்கும், சத்யராஜுக்குமான மோதல்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். ஹீரோயினாக நடித்திருப்பவர் ஸ்ரீ திவ்யா.

டி.இமானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். சுப்பிரமணியெம் ஒளிப்பதிவு. சிவ கார்த்திகேயனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். 30 லட்சம் பேர் அதை பார்த்திருக்காங்க என்ற பூரிப்பு சிவ கார்த்திகேயனுக்கு. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை தயாரித்திருக்கிறார்.

வாலிபர் சங்கத்தில் இம்ப்ரசான திருப்பதி பிரதர்ஸ் சிவ கார்த்திகேயனை இயக்கும் பொறுப்பை பூபதி பாண்டியனிடமிருந்து பொன்ராமிடம் தந்திருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இதைவிட கட்டியம் கூற முடியுமா என்ன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil