Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2019-தேர்தல் தோல்வியால் வெட்கப்பட்டு தலை குணிந்து நிற்கிறோம்.இரவில் தூங்குவது கொஞ்ச நேரம் தான் இப்போ தூங்குவதே இல்லை - அமைச்சர் பி.மூர்த்தி!

2019-தேர்தல்  தோல்வியால் வெட்கப்பட்டு தலை குணிந்து நிற்கிறோம்.இரவில் தூங்குவது கொஞ்ச நேரம் தான் இப்போ தூங்குவதே இல்லை -  அமைச்சர் பி.மூர்த்தி!

J.Durai

மதுரை , செவ்வாய், 26 மார்ச் 2024 (08:27 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்  தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி:
 
எதையும் முன்னோடியாக முதன்மையாக செய்து கொண்டிருக்கும் நாம் மதுரை மாவட்டம் வெட்கப்பட்டு தலை குணிந்து நின்றது சோழவந்தானும் உசிலம்பட்டியும் தான்.
 
யாரையும் எதிர்பார்க்காத மண், எதற்கும் தலை குனியாத இந்த வீரம் செரிந்த இந்த உசிலம்பட்டி மண்ணில் 2019 -ல் தமிழ்நாட்டிலேயே எல்லாவற்றையும்  ஜெயிக்க முடியாததல்லாம் ஜெயித்துவிட்டு நாம் அன்று இரு தொகுதியிலும் வாக்கு குறைவாக பெற்றதை நித்தம் நித்தம் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
 
எந்த வகையிலும் கட்சியின் தொண்டர்கள் துவண்டு விட கூடாது அன்று வேட்பாளரின் அணுகுமுறை இருந்திருக்கலாம், நாம் உழைப்பதற்கு தயாராக இருந்திருக்கலாம், பண பலத்தால் எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு பண பலத்தால் அன்று தோல்வியுற்றோம்.
 
அதில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 4 தொகுதிகளை விட நாம் தான் வாக்கு குறைவாக பெற்றோம் என்பது வேதனை எனக்கு.
 
இழந்த பெருமையால் தலை குணிந்து நிற்கும் நாம் தலை நிமிருவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
 
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எந்த தொகுதியை பற்றியும் கவலை படவில்லை,இந்த வருங்கால தமிழகத்தை நடத்தி கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினும் தேனி பாராளுமன்றம் வெற்றி பெற வேண்டும், உசிலம்பட்டியும், சோழவந்தானும் இழந்த பெருமையை மீண்டும் வெற்றி பெற வேண்டும்.
 
இரவில் தூங்குவது கொஞ்ச நேரம் தான் இப்போது தூங்குவதே இல்லை.
 
மதுரையிலே இரண்டு தொகுதிகள் உள்ளது. விருதுநகரில் திருப்பரங்குன்றமும், திருமங்கலமும் உள்ளது அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை, இந்த உசிலம்பட்டியும், சோழவந்தானும் அதிகமான வாக்குகளை பெற்றுவிட்டோம் என என்று சொல்கிறோமோ அன்று தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.
 
அதை பெறுவோம் உசிலம்பட்டி தான் மற்ற தொகுதிக்கு முன்மாதிரி என தலைவரிடம் சொல்லியுள்ளேன் என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை.. எங்களுக்கு யாரும் போட்டியில்லை: அமைச்சர் சேகர்பாபு