Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருத்ர தாண்டவமாடும் தேர்தல் விதிமீறல்..! தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா..?

Election Commision

Senthil Velan

, செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:55 IST)
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
 
மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

 
நாளை மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லியில் பிடிபட்ட 1425 கிலோ தங்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு! - ஆயிரக்கணக்கான விவசாயிகள் இலவசமாக பயனடைய உள்ளனர்!