Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

29ஆம் தேதி முதல் பிரச்சாரம்..! பிரேமலதாவின் பரப்புரை விவரங்கள் இதோ...!!

Premalatha

Senthil Velan

, புதன், 27 மார்ச் 2024 (11:59 IST)
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வருகிற 29ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, அதிமுக, புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி வருகிற 29ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி,  சேலத்திலும், 31 ஆம் தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரத்திலும் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
 
ஏப்ரல் 1 ஆம் தேதி பெரம்பூர், புதுக்கோட்டை, திருச்சியிலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணத்திலும், ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில்  திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும், ஏப்ரல் 5 ஆம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னையிலும், ஏப்ரல் 7,8 ஆகிய தேதிகளில் கடலூரிலும், ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 
 
ஏப்ரல் 11 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியிலும், ஏப்ரல் 12 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்களிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி கரூர், நாமக்கல், தேனீயிலும், ஏப்ரல் 14 முதல் 17 ஆம் தேதி வரை  மதுரை, தென்காசி மற்றும் விருதுநகரிலும் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் பே மூலம் பிச்சை கேட்கிறார்கள்.. பிக்பாஸ் நடிகையின் அதிர்ச்சி பதிவு..!