Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீமான் - அருணன் வார்த்தை மோதலும், பாண்டேவின் சாமார்த்திய விளக்கமும்

சீமான் - அருணன் வார்த்தை மோதலும், பாண்டேவின் சாமார்த்திய விளக்கமும்

அ.லெனின் அகத்தியநாடன்

, வியாழன், 3 மார்ச் 2016 (12:22 IST)
தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில், ‘விஜயகாந்துக்கு மவுசு - வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
 

 
இந்த விவாதத்தில் பேராசிரியர் அருணன் [சிபிஐஎம்], சீமான் [நாம் தமிழர் கட்சி], சரவணன் [திமுக], வானதி ஸ்ரீநிவாசன் [பாஜக] ஆகியோர் பங்கு கொண்டனர்.
 
விவாதத்தின்போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அருணனும் நேரலை நிகழ்ச்சியில் மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
முதலில் இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான சிலரின் கருத்துகள்:
 
யமுனா ராஜேந்திரன்:
 
சீமான்-அருணன்-பாண்டே பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மடைமாற்றுவது அடிப்படைப் பிரச்சினையை எதிர்கொள்ளாத விலகல் பார்வை. பாண்டே, ஹரிஹரன் போன்றோரின் மாடரேஷன் அணுகுமுறையே முட்டாள்தனமானது.
ஒரு குழு விவாதத்தில் மாடரேட்டர் எல்லோரிடமும் எதிரும் புதிருமாகப் பேசுவது அல்ல மாடரேஷன். விவாதங்களைத் தொகுப்பதும், பங்குபற்றுபவர்கள் நேரடியாக மோதிக்கொள்ளாமல் தமது தரப்பை மட்டும் முன்வைப்பதாகப் பார்த்துக்கொள்வதும், எல்லை மீறாமல் விவாதத்தைக் கட்டுக்குள் வைப்பதும்தான் மாடரேட்டரின் எத்திக்.
 
சண்டை மூட்டிவிட்டு முட்டிக் கொண்டு ரத்தம் வர அடித்துக் கொள்வதை வேடிக்கை பார்க்கிற மனநிலை பிறழ்ந்த வெறியன்கள் போல பாண்டேவும் ஹரிகரனும் நடந்து கொள்கிறார்கள். அர்னாப் எனும் வெறியன் வடக்கில் என்றால் தெற்கில் பாண்டே. விவாத மரபில நாகரீகத்தைப் பேணுவது தொடர்பான விவாதமே இன்று தேவை. அதன் பின் அரசியலைக் காலம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம்..
 
தஞ்சை தேவா:
 
சீமான், அருணன் இவர்களோடு அமெரிக்கை நாராயணன், இளங்கோவன், மற்றும் மனுஷ்யபுத்திரனையும் சேர்த்து கோத்து விட்டால் ஒரு வழியா யாரு லூஸுன்னு முடிவாயிடும் ...முயற்சி பண்ணுங்க பாண்டே
 
புகழ் மகேந்திரன்:
நல்ல வேளை சீமான் பக்கத்துல உட்காரல அருணன்... செம்ம அடி வாங்கியிருப்பார் சீமான்கிட்ட.
இவர் அவர் யோவ் லூசாயா நீ என கேட்க்க....இவர் யாருடா லூசு நீதான்டா லூசு என ஏச...அடடா...அருமை...
முதலில் அநாகரிக பேச்சை ஆரம்பித்த சீமானை வருத்தம் தெரிவிக்க சொல்லாமல் விட்டது ஏன் பாண்டே?
ஆனால் ஒன்று நன்றாக தெரிகிறது, என்றோ ஒருநாள் நேரலை விவாத நிகழ்ச்சிகளில் "பீப்" வார்த்தைகளில் ஏசுவதும், ஓருவருக்கோருவர் கைகலப்பில் ஈடுபடப்போவதும் வெகு தூரத்தில் இல்லை என தெரிகிறது...
 
அதிரை தவ்ஹீத்:
 
பார்ப்பனியத்தின் அரிப்பை தீர்த்திக்கொண்ட காவி வெரிநாய் பாண்டே..!
தந்தி டி.வியில் அருணனும், சீமானும்! இருவரும் வார்த்தைகளில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கும்போது சீமான் வார்த்தை தடித்து உதிர்க்கத் தயாராகிறார் என்பது புரிகிறது. பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அவரின் அடுத்த வார்த்தைகள், நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அதனைத் தடுப்பதற்கு கொஞ்சமும் முயலவில்லை ரங்கராஜ் பாண்டே.
 
கொள்கை குறித்த விவாதம் வேகமாகி, அருணனை லூசு' என்று விளிக்கிறார் சீமான் அருணன் கோபமாகி 'அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்' என்கிறார்.
 
இந்த இடத்தில் வேறொரு தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரை நினைத்துப் பாருங்கள். அவர்களது குரல் உயர்ந்திருக்கும், விவாதத்தை திசை திருப்பியிருப்பார்கள். விசயத்துக்கு வாங்க என்று வழிநடத்தியிருப்பார்கள். இது எதற்கும் முயலாத ரங்கரா 'பாண்டே'வின் முகத்தை அப்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
 
வரலாற்றுக் காலத்திலிருந்து நமக்குள்ளே மோதவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் குரூர முகம் எப்படி இருக்கும் என்பதை இத்தனை அப்பட்டமாய் யாரும் வெளிப்படுத்தி நான் பார்த்ததில்லை.
 
பொதுவுடைமைச் சிந்தனையாளர் அருணனை ஆள்வைத்துத் திட்டி அரிப்பைத் தீர்த்துக் கொண்டது போலாயிற்று; அவரைக் கோபப்படுத்தியது போலவும் ஆயிற்று. இதைத்தானே பார்பனியம் காலம்காலமாகச் செய்துகொண்டிருக்கிறது.
 
இரண்டு உயிர்களை மோதவிட்டு, ரத்தத்தை நக்கிச் சுவைக்க நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருக்கும் அந்தக் குரூர முகத்தைக் காணச் சகிக்கவில்லை...சே... எத்தனை காலத்துக் கொடூர முகம்.
 
பரக்கத் அலி ஏ.ஆர்:
 
சீமான் லூசுன்னு எப்படி சொல்லலாம், மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என்று அய்யா அருணன் பாண்டேவிடம் சொல்லும் போது..
வெளியே இருப்பதனால் பேச வாய்ப்பு கிடைக்காத அந்த ஆதங்கத்தில் சீமான் அப்படி சொல்லிவிட்டார் என்று அய்யா அருணனிற்கு பாண்டே பதில் தருகிறார்.
நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களை முழுமையாக பேச வாய்ப்பு கொடுக்காமல் அனைவருக்கும் ஆதங்கத்தை ஏற்றிவிடுபவர் இந்த பாண்டேதான் என்பது முழு உலகிற்கே தெரியும்.
அந்தவகையில் இனி பாண்டேவின் நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் ஆதங்கப்பட்டால் பாண்டேவை போடா லூசு என்று சொல்லலாம்.
 
இவ்வளவு களேபரங்கள் நடைபெறுவதற்கு இடையில், பாண்டே தனது தரப்பிற்கு ஒரு சிறு விளக்கத்தை சாமார்த்தியத்தோடு வெளியிட்டுள்ளார். அது கீழே:

ரங்கராஜ் பாண்டே:
 
ஆயுத எழுத்து விவாதம் தனிப்பட்ட முறையில் திசை திரும்பியது பெரும் வேதனையே. வினாடி நேரத்தில் இரு விருந்தினர்களும் உணர்ச்சி வயப்பட்டுவிட்ட பிறகு, சமாதானங்கள் சடங்குகளாகின்றன. ஆனாலும் முயன்றேன். மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும். இன்னும் கவனமாக இரு(ந்திரு)க்க வேண்டும்.
 
சம்பந்தப்பட்ட காட்சியின் வீடியோ இணைப்பு:
 
 

Share this Story:

Follow Webdunia tamil