Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவுடன் பாஜக கூட்டணி? ரஜினிகாந்தை வைத்து காய் நகர்த்தலா?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி? ரஜினிகாந்தை வைத்து காய் நகர்த்தலா?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி? ரஜினிகாந்தை வைத்து காய் நகர்த்தலா?

அ.லெனின் அகத்தியநாடன்

, ஞாயிறு, 21 பிப்ரவரி 2016 (08:43 IST)
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

 
வரவிருக்கின்ற தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் ஒருவழியாக திமுக, காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது என்று முடிவாகிவிட்டது. அத்துடன் மேலும், சில உதிரிக்கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரும்.
 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தங்களது பழைய நட்பை புதுப்பிக்கும் வகையில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இது குறித்து அதிமுக மற்றும் பாஜக தரப்பு அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடந்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையின் போது பாஜக தரப்பு 100 சீட்கள் கேட்க ஆர்வமாக இருப்பதாகவும், 60 சீட்டுகளுக்கு குறைவான இடங்களை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அதிமுக மக்களவையில் 37 இடங்களும், மாநிலங்களவையில் 11 இடங்களும் பெற்றிருக்கிறது. இதனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்த்தில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், தங்களது பலம் அதிகரிக்கும் என்று பாஜக கருதுகிறது.
 
webdunia

 
இதன் மூலம், பாராளுமன்றத்தில் 10 சதவீத ஓட்டுகள் அதிகரித்து தங்களது கை ஓங்குவதோடு, தாங்கள் கொண்டுவரும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று பாஜக கருதுகிறது.
 
இதுதவிர, இந்த வட்டத்திற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கொண்டுவர பாஜக பெரும் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திராவிட அரசியலில் இருந்து மக்களை வெளியே கொண்டுவர ரஜினிகாந்தின் வருகை உதவியாக இருக்கும் என பாஜக நம்புகிறது.
 
அவ்வாறு ரஜினிகாந்த் பாஜகவிற்கு வந்தால் மாநில அளவிலான தலைவர் அந்தஸ்து வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிகிறது. இதன் முன்னோட்டமாகவே இந்த ஆண்டு ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
 
பிரதமர் மோடியுடன் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் இருவருமே நெருங்கி நட்பு பாராட்டி வருவது தெரிந்த விஷயமே. பாராளுமன்ற தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கே சென்று பிரதமர் மோடி தனிப்பட்ட ரீதியில் சந்தித்தது தெரியும்.
 
அதுபோல, கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்று மோடு விருந்து உண்டதும் அரிந்ததுதான். விஜயகாந்த் திமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்து நழுவும் பட்சத்தில் இந்த கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil