Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் சப்போர்ட்..! அட்டகாசமாக அறிமுகமான Google Pixel 8a! - சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?

Google Pixel 8A

Prasanth Karthick

, புதன், 8 மே 2024 (16:24 IST)
ஸ்மார்ட்போன் பயனாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த கூகிள் நிறுவனத்தி புதிய Google Pixel 8a இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் MI, Samsung, Realme, உள்ளிட்ட பல நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. ஆனாலும் மிக அரிதாகவே ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் Nothing Phone, Google நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கவே செய்கிறது. அவ்வாறாக இந்தியாவில் புதிய Google Pixel 8a ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது கூகிள்.

Google Pixel 8a ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.1 இன்ச் ஃபுல் ஹெச்டி OLED டிஸ்ப்ளே
  • கூகிள் டென்சார் G3 சிப்செட்
  • 3 GHz ப்ராசஸர், 120 Hz ரெப்ரெஷ் ரேட்
  • ஹெடிஆர் சப்போர்ட் கார்னிங் கொரில்லா க்ளாஸ்
  • டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்
  • ஆண்ட்ராய்டு 14
  • 8 GB ரேம்
  • 128 GB / 256 GB இண்டெர்னல் மெமரி
  • 64 MP + 13 MP டூவல் கேமரா
  • 13 MP செல்பி கேமரா
  • டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 4492 mAh பேட்டரி
  • 18 W பாஸ்ட் சார்ஜிங்
  • 7.5 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

இந்த Google Pixel 8a ஸ்மார்ட்போனுக்கு 7 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. அதனால் செக்யூரிட்டி அப்டேட்ஸ், ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் 7 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இந்த Google Pixel 8a ஸ்மார்ட்போன் Aloe Green, Bay Blue, Obsidian Black, Porcelain White ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.52,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.59,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கூகிள் பிக்சல் 8 ஏ ஸ்மார்ட்போன் மே 14ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் ஃபிளிப்கார்ட் தளத்தில் இப்போதிருந்தே முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினோத வழக்கு.! மனுதாரராக கடவுள் ஆஞ்சநேயர் சேர்ப்பு.! அபராதம் விதித்த நீதிமன்றம்..!