Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த வாரம் வெளியாகிறது Chat GPT செயலி! – இனி கூகிள் கதி அவ்ளோதானா?

Chat GPT app
, ஞாயிறு, 23 ஜூலை 2023 (09:04 IST)
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்த Chat GPT அடுத்த வாரத்தில் செல்போன் செயலியாகவும் அறிமுகமாக உள்ளது.



மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான Open AI மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட AI தான் Chat GPT. அனைத்து விதமான நிரல் பயன்பாட்டிற்கும் பயன்படும் வகையில் வெளியான சாட் ஜிபிடி தொழில்நுட்ப உலகில் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது. சாட் ஜிபிடியை தொடர்ந்து பல AI கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

உலகம் முழுவதும் தேடுபொறியில் நம்பன் ஒன் இடத்தில் உள்ள கூகிளின் ஆதிக்கத்தை அடக்கவே சாட் ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டதாக டெக் உலகில் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் சாட் ஜிபிடிக்கு எதிராக பல்வேறு மொழிகளிலும் செயல்படும் BARD AIஐ கூகிளும் வெளியிட்டுள்ளது.

இந்த AI போட்டியின் அடுத்தக்கட்டமாக அடுத்தவாரம் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சாட் ஜிபிடி செயலியாக அறிமுகமாக உள்ளது. இது ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும், மாணவர்கள் தங்கள் ப்ராஜெக்ட் போன்றவற்றிற்காகவும், ஐடி தொழிலாளர்கள் பலருமே நிரல் எழுதுதல் போன்ற உதவிகளுக்கும் கூகிள் தேடுபொறிக்கு பதிலாக சாட் ஜிபிடியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கூகிளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை! – எந்தெந்த மாவட்டங்களில்?