Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிஎஸ்கே தோல்விக்கு இவர்தான் காரணமா?

சிஎஸ்கே தோல்விக்கு இவர்தான் காரணமா?
, சனி, 12 மே 2018 (13:45 IST)
நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 176 ரன்கள் சேர்த்தது. 
 
177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில், இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
தற்போது, 11 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 7 வெற்றி என மொத்தம் 14 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது சென்னை அணி. இந்த தோல்விக்கான காரணங்களை கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர். 
 
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், என்பதை அறிந்தும் தோனி டாஸில் வென்று முதலில் பேட் செய்தது, இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கொடுக்காதது, பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் சொதப்பியது என பல காரணங்கள் கூறப்படுகிறது. 
 
இது குறித்து தோனி கூறியிருப்பதாவது, பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யக்கோரி தெரிவித்த பின்னரும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அதை நிராகரித்துவிட்டார். 
 
நாங்கள் ஒரு குறிப்பிட்ட லெந்த்தில்தான் பந்து வீசியிருக்க வேண்டும் அதுதான் திட்டமும் கூட. பவுலர்களிடம் தெளிவாக எப்படி வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்களால் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை.
 
நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆடவில்லை, வெற்றி பெற ஆடுகிறோம் எனவே மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகில இந்திய அளவிலான தேசிய சிலம்பாட்ட போட்டியில் கரூர் மாணவிக்கு தங்கம்