Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயுள் காப்பீடு: உங்களது சந்தேகங்களுக்கான விடை இதோ - வீடியோ இணைப்பு

ஆயுள் காப்பீடு: உங்களது சந்தேகங்களுக்கான விடை இதோ - வீடியோ இணைப்பு
, வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (16:19 IST)
காப்பீடு குறித்த நமக்கு எழும் சந்தேகங்களுக்கு காப்பீட்டு துறையைச் சார்ந்த ராஜா விளக்கம் அளித்தார். காப்பீடு குறித்து  நாம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த விளக்கங்களும் கீழே காணலாம்.



1. ஆயுள் காப்பீடு என்றால் என்ன? அதை பற்றிய விளக்கம்?
எந்த ஒரு நபராக இருந்தாலும் அவருடைய வாழ்க்கை நாம் 4 பிரிவாக பிரிக்கலாம். முதலில் 0-லிருந்து 21 வயது வரைக்கும் ஒரு பருவம். அந்த பருவத்தில் அவர் தனது தாய் தந்தையரையோ அல்லது மற்றவரையோ சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அந்த பருவத்தை அடுத்து தனது வருமானத்தை ஈட்ட கூடிய  அடுத்த கட்டத்திற்கு செல்வார். தன்னுடைய குடும்பத்திற்காக வருமானத்தை ஈட்ட முற்படுவார். அப்போது அவரை சார்ந்து தனது குடும்பம் இருக்கிறது என்பதை  உணர்ந்து தன் தனிப்பட்ட வாழ்க்கை பிள்ளைகள், படிப்பு, திருமணம் என செல்லவேண்டியுள்ளது. எனவே அந்த ஆயுள் முழுக்க அவருடைய வருமானத்தை  சார்ந்து இருப்பதால் அந்த ஆயுள் யாருடையதோ அவருக்கு பாதுகாப்பு கட்டாயம் தேவை. எனவே அவரின் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில், நிதி  நிலைமையை சரிகட்ட ஆயுள் காப்பீடு மிக மிக அவசியம்.
 
2. ஆயுள் காப்பீட்டில் எந்த வகை பெஸ்ட்?
 
மனிதனின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பணம் கட்டாயம் தேவை. பிறக்கும் குழந்தையை படிக்கவைக்க பணம் கட்டாயம் தேவை. முந்தைய தலைமுறையினர் கல்லூரிக்கு எவ்வளவு பணம் செலவழித்தார்களோ அதே அளவு பணம் தற்போது படிக்கும் பிள்ளைகளுக்கு செலவிடுகிறோம். ஆயுள் காப்பீட்டின் மூலம் உங்கள்  குழந்தை என்னவாக நினைக்கிறோமோ அதற்க்கேற்றப்படி ஆயுள் காப்பீட்டில் சேர்த்து வைக்கலாம். எந்த வகையாக இருந்தாலும் அதனை ஆயுள் காப்பீட்டின்  மூலம் சேர்த்து வைக்கும்போது உங்களது ஃபினான்சியல் நெருக்கடியை சரிகட்டி சேவிங்சையும் பாதுகாப்பாக வைக்க உதவியாக இருக்கும்.


webdunia
 
3. இன்சூரன்ஸ் பாலிசி இருக்கு, ELSS ஃபண்ட் இதில் எந்த வகை வரி சலுகைக்கு பெஸ்ட்?
 
வரி சலுகை என்று எடுத்துக்கொண்டால் இப்போது அதில் அதிக பிரிவுகள் உள்ளது. 80C கவரேஜ் வரும். அந்த பணம் முதிர்வடையும்போது ELSSல் tax  லைவ் லாங் இருக்கும். eee பெனிபிட் இருக்கிறதா என பார்த்து செய்வது நல்லது. அதாவது 10 10D பெனிபிட் இருக்கிறதா என பார்க்க வேண்டும். eee  பெனிபிட் என்பார்கள் அதாவது பாலிசி போடும்போது வாஇ சலுகை இருக்கிறதா அது வளரும்போதும் வரி சலுகை இருக்கிறதா, அது முதிர்வடையும்போதும்  இருக்கிறதா என ஆராய்ந்து அறிவது அவசியம். 
 
4. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு ஒருவர் செய்ய வேண்டியது என்ன?
 
இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு ஒருவர், தான் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த விஷயத்தை அதாவது இந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன் என  வீட்டில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடம் தெரியப்படுத்துவது முக்கியம். ஏனென்றால் உரிமை கோரல் (Claims) வரும்போது நம்முடைய ரத்த பந்தங்கள்  தெரிந்திருந்தால்தான் claims-க்கு செல்ல முடியும். பாலிசியின் தவணை முறையை தவறாமல் கட்ட வேண்டியது அவசியம். தவறினால் பிரச்சனைகள் வர  வாய்ப்பு உள்ளது. பாலிசி எடுத்ததிற்கான பாலிசி பத்திரம் கொடுக்கப்படும், பத்திரத்திற்கு வரி செலுத்தியும், பலிசி நபருக்கு இவ்வளவு தொகை, இந்த நாளில்  முடிவடைகிறது என்ற விவரங்கள் அடங்கியிருக்கும். எனவே அதனை நாம பத்திரமாக வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
 
5. இன்சூரன்ஸ் பாலிசியில் நாம் கவனிக்க வேண்டிய Claim ரேஸ்யோ என்ன?
 
நாம் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, அந்த நிறுவனத்தின் பங்கீடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிறுவனம் எவ்வளவு பாலிசி  கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு செட்டில்மெண்ட் செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும். Claim ரேஸ்யோ என்றால் 100 பேர் பாலிசி எடுத்து  அதில் 10 claim வந்து, 9 பேருக்கு செட்டில் பண்ணியிருக்கிறார்கள் ஒரு நிறுவனம் இருந்தால் அதனை தேர்வு செய்வது நல்லது.
 
6. ஹெல்த் இன்சூரன்ஸில் இது வரை ஒரு சில நோய்களுக்கு மட்டும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஏதாவது புதிதாக பாலிசி இருக்கிறதா?
 
ஹெல்த் இன்சூரன்ஸில் இது வரை ஒரு சில நோய்களுக்கு மட்டும் இல்லாமல் இருந்தது. அதில் முக்கியமாக கேன்சருக்கு பாலிசி இருப்பதுதான்.

 
 
இன்சூரன்ஸ் பாலிசி தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கக்கள் பெற தொடர்பு கொள்ள...

 
பெயர்:  ராஜா(காப்பீட்டு ஆலோசகர்)
தொலைபேசி எண்: 9884088876.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் உண்ணாவிரதமே இருக்க மாட்டேன்: வாபஸ் பெற்ற ஜீயர்!