Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருசியான பழ முந்திரி புலவு செய்வது எப்படி?

Fruit Pulao
, செவ்வாய், 14 நவம்பர் 2023 (10:50 IST)
பழங்களை கொண்டு செய்யப்படும் புலவு சாதம் நல்ல ருசியோடு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. சுவையான பழ முந்திரி புலவு செய்வது எப்படி என பார்ப்போம்.


 
  • தேவையானவை: பாசுமதி அரிசி, முந்திரி, பாதாம், அன்னாசி பழம், ஆப்பிள், சர்க்கரை, குங்குமப்பூ, பச்சை மிளகாய், உப்பு
  • தாளிப்பதற்கு: பட்டை, இலவங்கம், ஏலக்காய், நெய், கருஞ்சீரகம்
  • பாதம், முந்திரியை நீளமாகவும், பழங்களை பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாசுமதி அரிசியை ஊறவைத்து உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் நெய்யை ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  • சர்க்கரை உருகி வரும்போது தாளிக்கும் பொருட்களை போட்டு நன்றாக தாளிக்க வேண்டும்.
  • பின்னர் பாதாம், முந்திரி, பச்சை மிளகாயை போட்டு பின்னர் பழங்கள், குங்குமப்பூவை போட்டு கிளற வேண்டும்.
  • பின்னர் பாஸ்மதி அரிசியை அதில் கொட்டி கிளறி கொஞ்ச நேரம் தம் கட்டினால் சுவையான பழ முந்திரி புலாவ் ரெடி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரையை பளபளப்பாக மாற்ற இதை ட்ரை பண்ணுங்க!