ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து ஆஸ்கார் இயக்குனர் விலகல்

சனி, 22 செப்டம்பர் 2018 (14:31 IST)
ஜேம்ஸ் பாண்ட் படவரிசையில் 25 வது படமாக வரவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலிருந்து ஆஸ்கார் விருது வென்ற இயக்குனர் டேனி பாய்ல் விலகியுள்ளார்.டேனியல் கிரைக் ஸ்பெக்டர் படத்தோடு ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். அதையடுத்து முதன் முதலாக கருப்பினத்தை சேர்ந்த இட்ரிஸ் எல்பா ஜேம்ஸ் பாண்ட் வேடமேற்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிரைக்கே ஐந்தாவது முறையாக பாண்ட் வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இயக்குனராக ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் இயக்குனர் டேனி பாய்ல் அறிவிக்கப்பட்டார்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து விலகுவதாக டேனி பாய்ல் அறிவித்துள்ளார். பட உருவாக்கத்தில் தயாரிப்பு தரப்போடு ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து படத்தின் இயக்குனருக்கான தேடுதல் நடைபெற்று வந்தது. பல்வேறு இயக்குனர்களின் பரிசீலனைக்குப் பிறகு தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குனர் கேரி புகுனகா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.

இதனையடுத்து படப்பிடிப்பு மார்ச் 2019-ல் தொடங்கி பிப்ரவரி 2020-ல் உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் எனவும் தயாரிப்புத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் விஜய் படத்தின் பாடல் வரியை படத்தலைப்பாக்கிய சிவகார்த்திகேயன்?