Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்வதன் சிறப்புக்கள் !!

தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்வதன் சிறப்புக்கள் !!
, திங்கள், 17 அக்டோபர் 2022 (16:19 IST)
பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.


ஆணவம் கொ ண்ட பிரம்ம தேவனின் தலையை கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர்.
மன்மதனின் கர்வம் அடங்க செய்தவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின்  மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட பைரவமூர்த்தியை கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.

சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். உங்கள் தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் மூலம் ஏற்படும் கஷ்டம் , பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர அல்லது உயர் பதவியில் அமர இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு கண்டிப்பாய் உதவிடும்.

பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் நடக்கும் போது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் உண்டாகும்தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வ வளம் தரும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு !!