Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரடைப்பு எதனால் வருகிறது? என்னென்ன அறிகுறிகள்..!

heart attack
, சனி, 28 அக்டோபர் 2023 (17:16 IST)
தற்காலத்தில் இளைய தலைமுறையினர்களுக்கு கூட மாரடைப்பு வருவது வழக்கம் ஆகிவிட்டது என்பதும் மாரடைப்பால் இளைஞர்கள் கூட மரணம் அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் மாரடைப்பு வருவது ஏன்? அதற்கான தீர்வுகள் என்ன என்பதை பார்ப்போம்.  மாரடைப்பு என்பது பரம்பரையாக வரக்கூடியது என்பதும், அதேபோல் அதிக உடல் உழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கம் இன்மை, கொழுப்பு உணவுகள் அதிகம் சாப்பிடுவது மற்றும் மன அழுத்தம் ஆகியவை காரணமாக மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்று கூறப்படுகின்றன. 
 
குறிப்பாக கோபம், கவலை, பயம், விரக்தி ஆகியவை இருந்தால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் புகை பிடிப்பது, மது குடிப்பது, ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது, நீரிழி நோய் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. 
உடற்பயிற்சி செய்யாமல் உடல் உழைப்பே இல்லாமல் இருப்பவர்களுக்கும், அதே போல் ஓய்வின்றி கடுமையாக உழைப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு.  அளவான உடற்பயிற்சி, சுகாதாரமான உணவு, ஆரோக்கியமான சூழல் மற்றும்  ஒழுக்கமான வாழ்க்கை முறை, மன கவலை இல்லாமல் இருத்தல் ஆகியவை மாரடைப்பு வராமல் தற்காத்துக் கொள்ளும் காரணங்களாகும்.  
 
மாரடைப்பு வந்தால் உடனடியாக சொந்த வைத்தியம் பார்க்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என்பதையும் அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பப்பாளி சாப்பிடும் முன் இதை கவனிப்பது அவசியம்!