Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கால்சியம் சத்து குறைவதை கண்டுபிடிப்பது எப்படி?

Calcium Foods
, புதன், 15 நவம்பர் 2023 (09:06 IST)
உடலுக்கு அவசியமான சத்துக்களில் கால்சியம் சத்து முக்கியமான ஒன்று. கால்சியம் சத்து குறைவதால் எலும்பு, பற்களில் பாதிப்பு ஏற்படலாம். கால்சியம் சத்து குறைவதை எப்படி கண்டறிவது என தெரிந்து கொள்வோம்.


  • முதுகு வலி, மூட்டு வலி, நகம், பற்கள் பாதிப்பு ஏற்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம்.
  • நடுத்தர வயது ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் 1300 மி.கி கால்சியம் எடுக்க வேண்டும்.
  • கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பை ஹைபோகால்சீமியா என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபக மறதி அதிகரிக்கும்.
  • தசைப்பிடிப்பு, கை, பாதம், முகத்தில் உணர்ச்சி இல்லாமல் போவது கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாகும்.
  • கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் கால்சியம் குறைபாடு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
  • பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது. பால் தவிர பல காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் நிறைந்துள்ளது.
  • கால்சிய சத்து குறைபாடு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் 20 கோடியாக உயர்வார்கள்! – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!