Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜியோ ஹோம் பற்றி தெரியுமா? இதுதான் அம்பானியின் அடுத்த ப்ளான்...

ஜியோ ஹோம் பற்றி தெரியுமா? இதுதான் அம்பானியின் அடுத்த ப்ளான்...
, புதன், 18 ஏப்ரல் 2018 (12:20 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அதோடு பல முன்னணி நிறுவனங்களுக்கு நெருக்கடியை கொடுத்தது. 
 
விலை குறைப்பு, கூடுதல் சலுகை என மற்ற தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. ஜியோ தற்போது அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.
 
ஜியோ ஹோம் என்ற பெயரில் புது சேவை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஜியோவின் அடுத்த பெரிய திட்டம் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த திட்டம் இந்திய டிடிஹெச் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை Enhanced Multimedia Broadcast Multicast Service என கூறப்படுகிறது.  
webdunia
ஜியோ ஹோம் டிவி சேவையில் எஸ்டி (standard definition)சேனல்களுக்கு மாதம் ரூ.200 மற்றும் ஹெச்டி சேனல்களுக்கு ரூ.400 என கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 
ஜியோ டிடிஹெச் சேவைக்கு பதில் இந்த சேவை வெளிவர உள்ளதாக தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஜியோ ஹோம் டிவி சேவை பற்றிய தகவல்களையும் சேவையையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்மலா தேவி கூறிய விவிஐபிகளின் பெயர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்