Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி ? தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கருத்து

Virat Kohli
, திங்கள், 10 ஜூலை 2023 (20:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி. இவரை மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்குவது குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்
.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற, உலக டெஸ்ட் சேம்பியன்சஷிப்  இறுதிப் போட்டியில் தோற்றது.

இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் அவரது செயல்பாடுகள் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.

எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் பற்றி கிரிக்கெட் போர்டு குழுவினர் விவாதித்து வருகின்றனர்.

அடுத்து நடைபெறவுள்ள மே.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இனி வரவுள்ள ஆண்டுகளில் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார என்று தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ''இதற்கு எனக்குப் பதிலளிக்க முடியுமா எனத் தெரியவில்லை. இனிவரும் உலக டெஸ்ட் சாமியன்ஷிப் பற்றி தேர்வாளர்களின் மன நிலை இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

மேலும், ''ரோஹித் சர்மாவுக்குப் பின் இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக வருவதற்காக வாய்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பினனர்.

அதற்கு அவர், ஏன் விராட் கோலி இல்லை? ரஹானே மீண்டும் வந்து துணைக்கேப்டனாகும் போது, விராட் கோலி ஏன் கேப்டனாக முடியாது . கேப்டன் பதவியில் விராட் கோலியின் மனநிலை பற்றி தெரியவில்லை. தேர்வுக்குழுவினர் மாற்றி யோசனை செய்தால், கோலியும் கேப்டன் பொறுப்பிற்கு வரலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இவைதான்… கங்குலி கணிப்பு!