Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலிறுதியில் வெல்லப்போவது யார்? - இந்தியா Vs வங்கதேசம்: ஓர் முன்னோட்டம்

காலிறுதியில் வெல்லப்போவது யார்? - இந்தியா Vs வங்கதேசம்: ஓர் முன்னோட்டம்

லெனின் அகத்தியநாடன்

, புதன், 18 மார்ச் 2015 (17:31 IST)
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளில் யார் அரையிறுதிக்கு முன்னேறப் போகிறார்கள் என்பது குறித்த முன்னோட்டம் இது.
 
ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 29 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 24 முறையும், வங்கதேசம் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளுக்கு முடிவில்லை. உலகக்கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன.
 

 
இதில் 2007ஆம் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், வங்கதேசம் இந்தியாவை வீழ்த்தியது. 2011ஆம் ஆண்டு இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது.
 
உலகக்கோப்பையில் புள்ளி பட்டியலில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா 6 ஆட்டங்களில் விளையாடி ஆறிலும் வென்று முதல் இடத்தை பிடித்திருந்தது. அதேபோல ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த வங்கதேசம் 6 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வென்று நான்காம் இடத்தை பிடித்திருந்தது.
 
அணி வீரர்கள்:
 
இந்தியா:
மகேந்திர சிங் தோனி (கே & வி.கீ.), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்யா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முஹமது ஷமி, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, அம்பதி ராயுடு, அக்ஸர் படேல், புவனேஸ்வர் குமார், ஸ்டூவர்ட் பின்னி
 
வங்கதேசம்:
மஷ்ரஃபே மோர்தசா (கே), அராஃபத் சன்னி, முஹமது மஹ்மதுல்லா, மோம்னல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், நாசிர் ஹொசைன், ரூபல் ஹொசைன், சபீர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன், சௌமிய சர்கர், தைஜூல் இஸ்லாம், தமிம் இக்பால், டஸ்கின் அஹ்மது, ஷபியுல் இஸ்லாம், இம்ருல் கயஸ்
 
மேலும் அடுத்தப் பக்கம்...

அணி நிலவரம்:
 
இந்தியா:
இந்த உலகக்கோப்பை போட்டியில் தலா 6 ஆட்டங்களில் விளையாடி ஷிகர் தவான் 337 ரன்களும், விராட் கோலி 301 ரன்களும் எடுத்துள்ளனர். சுரேஷ் ரெய்னா 4 போட்டிகளில் 212 ரன்களும் குவித்துள்ளார். இதில் தவான் 2 சதமும், விராட் கோலி, ரெய்னா தலா ஒரு சதமும் அடித்துள்ளனர்.
 
webdunia

 
அதுபோல பந்துவீச்சில் தலா 5 போட்டிகளில் விளையாடி முகமது ஷமி 15 விக்கெட்டுகளையும், தலா 6 போட்டிகளில் அஸ்வின் (12), மொகித் சர்மா (10), உமேஷ் யாதவ் (10) விக்கெட்டுகளையும், கைப்பற்றியுள்ளனர்.
 
வங்கதேசம்:
இந்த உலகக்கோப்பையில் தலா 5 ஆட்டங்களில் விளையாடி முஹமது மஹ்மதுல்லா 344 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 271 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 186 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
webdunia

 
அதுபோல பந்துவீச்சில் தலா 5 போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் 7 விக்கெட்டுகளையும், ரூபல் ஹொசைன் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். மோர்தசா 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
வீரர்களின் சாதனைகள்:
 
இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் தூணாக விளங்கி வருகிறார் என்பது மறுக்கமுடியாது. ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, டி-20 உலகக்கோப்பை என அவரது தலைமையிலான இந்திய அணி வென்று சாதனைப் படைத்துள்ளது.
 
இந்நிலையில், தற்போது வரை தோனி தலைமையிலான இந்திய அணி 176 ஒருநாள் போட்டிக்களில் விளாயாடி 99 ஆட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. 62 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 4 ஆட்டம் ’டை’யில் முடிந்தது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
 
நாளை நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டியின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தோனி தலைமையிலான இந்திய அணியின் 100ஆவது வெற்றியாக அமையும். இதற்கு நாளை வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
 
இந்த உலகக்கோப்பை தொடரில் மஹ்மதுல்லா தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் சதத்தை பதிவு செய்துள்ளார். மேலும், அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் தரவரிசைப் பட்டியலில் ஆல் ரவுண்டர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

வீரர்கள் கருத்து:
 
 
இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா:
 
உண்மையிலேயே எங்களை மக்கள் காலிறுதிக்குள் தள்ளியிருக்கிறார்கள். இதோ காலிறுதியில் இருக்கும் எங்களை பற்றி எந்தவித தவறான விஷயமும் உங்களுக்கு எட்டவில்லை. நீங்கள் எல்லாமுமே சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் எல்லாமுமே சரியாகவே இருக்கும்.

webdunia


 

இங்கிலாந்து அணியின் முன்ளாள் கேப்டன் காலிங்வுட்:
 
இந்தியா மூன்று மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் மோசமாக விளையாடிய பிறகு, அவர்கள் மனதளவில் சோர்வடைய வாய்ப்பு இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
 
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துக்கு சாதகமான பிட்ச்சில் அவர்கள் மோர்னே மோர்க்கல், ஸ்டெய்ன் போன்றவர்களுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். இது இந்திய அணியின் பேட்டிங் பலத்தையே காட்டுகிறது.
 
இப்போது உள்ள நிலையில் எந்த அணியையும் விழ்த்தும் தன்னம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது. அவர்களுடன் ஒப்பிடும்போது காலிறுதில் வங்கள தேசத்தின் வெற்றி வாய்ப்பு குறைவுதான்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

வங்கதேச அணித்தலைவர் மஷ்ரஃபே மோர்தசா:
 
நாளையப் போட்டியை காண ஏறக்குறைய 95 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய அணிக்கு ஆதரவு அளிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் நான் ஒரு வீரராக, ஆட்டத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவேன்.
 
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீநாத்:
 
உலகக்கோப்பையில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதவுள்ளது என்று சொன்னதுமே, 2007ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்ததை ஒவ்வொரு முறையும் கூறுகிறோம். ஆனால் தற்போதுள்ள இந்திய அணி மன உறுதியுடன், ஒற்றுமையுடன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
webdunia
ஜவகல் ஸ்ரீநாத்
அதே சமயம், வங்கதேச அணியிலும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ஆனாலும் இந்திய அணியினர் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களும் உள்ளனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்:
 
எங்கள் அணி உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக கால் இறுதி போட்டியை சந்திக்கிறது. எனினும் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ள நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும். மேலும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியது இந்திய வீரர்களை எதிர்கொள்ள பக்க பலமாக இருக்கும்.
 
webdunia
ஷாகிப் அல் ஹசன்
இந்த அனுபவம் நிச்சயமாக தோனி, ரெய்னா போன்ற அதிரடி வீரர்களை கையாள உதவும். இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆக்ரோஷமாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே திசை திருப்பிவிடுவர். எனினும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்த முயற்சி செய்வோம்.

Share this Story:

Follow Webdunia tamil