Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோருக்கு இடமில்லை

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோருக்கு இடமில்லை
, செவ்வாய், 6 ஜனவரி 2015 (15:40 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 11 ஆவது உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட்டது.
 

 
மும்பைபில் நடைபெற்ற சந்தீப் பாட்டில் தலைமையிலான தேர்வாளர்கள் குழு கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 30 பேர் கொண்ட உத்தேச அணியிலிருந்து டோனி தலைமையிலான 15 வீரர்கல் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்தது.
 
இந்த வீரர்கள் பட்டியலில் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், கவுதம் கம்பிர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
 
இந்திய அணி  வீரர்கள் விவரம் வருமாறு: 
 
தோனி (கேப்டன்), விராட் கோலி (துணைக் கேப்டன்), ரஹானே, ஷிகர் தவான், ரோகித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, அக்ஷர் படேல், அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா

Share this Story:

Follow Webdunia tamil