Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

vinoth

, சனி, 27 ஏப்ரல் 2024 (07:20 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 261 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களும் பிலிப் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களும் சேர்த்தனர்.

அதன் பின்னர் ஆடிய பஞ்சாப் அணி கொல்கத்தாவை விட ஒரு படி அதிக அதிரடியோடு ஆடி 261 ரன்கள் என்ற சாதனை இலக்கை எட்டிப்பிடித்து வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. பஞ்சாப் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது.

48 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் “எங்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. நாம் எப்போதும் ரிஸ்க் எடுக்க வேண்டும். சிலசமயம் அது நமக்கு உதவும். சில சமயம் வேலைக்ககாது. சுனில் நரேன் ஓவர்களை தவிர்த்து எங்களுக்கு சில நல்ல ஓவர்கள் அமைந்தன. ஷஷாங்க சிங் ஒரு சிறப்பான வீரர். அவர் எவ்வளவு துல்லியமாக சிக்சர்களை அடிக்கிறார் என்று பாருங்கள்.  அவரது இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்