Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஎஸ்பியில் இருந்து கான்ஸ்டபிளாக மாறிய ஹர்மன்பிரீத் கௌர்!

டிஎஸ்பியில் இருந்து கான்ஸ்டபிளாக மாறிய ஹர்மன்பிரீத் கௌர்!
, செவ்வாய், 10 ஜூலை 2018 (13:34 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பித்ததால் அவரது டிஎஸ்பி பதவி பறிக்கப்பட்டு கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்டுளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நடசத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கௌர், கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதற்காக இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. 
 
அதோடு ரயில்வே துறையில் பணி வழங்கப்பட்டது. ஆனால் ஹர்மன்பிரீத் தனக்கு பஞ்சாப் மாநில டிஎஸ்பி-யாக பணியாற்றவே விருப்பம் என்று தெரிவித்தார். அவரது கோரிக்கைப்படி பஞ்சாப் முதல்வர் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி அவருக்கு டிஎஸ்பி பதவிக்கான நட்சத்திரங்களை சீருடையில் குத்திவிட்டனர். 
webdunia
ஹர்மன்பிரீத் பணியில் சேருவதற்கு முன் தனது பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பித்தார். ஆனால் இந்த சான்றிதழ்கள் போலியானது என்பது தெரியவந்தது. இதனால் ஹெர்மன்பிரீத் தனது டிஎஸ்பி பதவியை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 
 
இந்த போலி சான்றிதழ் விவகாரம் பஞ்சாப் முதல்வர் கவனத்துக்கு சென்ற நிலையில், முதல்வர் உத்தரவின் பெயரில், ஹர்மன்பிரீத் கவுருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் டிஎஸ்பி பதவி பறிக்கப்பட்டு, அவரின் தகுதிக்கு ஏற்ப, போலீஸ் கான்ஸ்டபிள் வழங்க உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபிபா உலகக்கோப்பை அரைஇறுதி போட்டி: பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்