Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில்வே பட்ஜெட்டின் முழு விவரம்

ரயில்வே பட்ஜெட்டின் விவரங்கள் உடனுக்குடன்

ரயில்வே பட்ஜெட்டின் முழு விவரம்

சுரேஷ் வெங்கடாசலம்

, வியாழன், 25 பிப்ரவரி 2016 (11:00 IST)
இந்த ரயில்வே பட்ஜெட்டில் 44 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில் கட்டண உயர்வு இல்லை

இந்த ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்களுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை.

=============================================================

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

=============================================================

139 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்த டிகெட்டை ரத்து செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவின் போது, பயனிகளுக்கு பயண காப்பீடு வழங்கப்படும்

குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் தானிங்கி கதவுகள் அமைக்கப்படும்.

விபத்தை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்

அடுத்த பட்ஜெட்டில் சரக்கு ரயில்களுக்கான பணிமனை அமைக்கப்படும்

இந்த பட்ஜெட்டில் 44 புதிய திட்டங்கள் அறிமுகப்படத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் இணையதளம் மூலம் சிறப்பு சலுகை விலையில் டிகெட் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்படும்

=============================================================

பினதங்கிய பகுதிகளில் ரயில்வே திட்டங்களை கண்கானிக்க ஆளில்லா விமானம் பயண்படுத்தப்படும்.
 
விபத்துக்களை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.
 
ரயில்வே துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.

பெண்களுக்கு முன்பதிவு செய்வதில் 33 சதவீத இடம் வழங்கப்படும்

=============================================================

இந்தியாவிலேயே முதன் முறையாக ரயில் வாகன மையம் சென்னையில் அமைக்கப்படும்.
 
ரயில் பாதையை ஒட்டியுள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்கள் வணிக ரீதியில் பயண்படுத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் கையடக்க கருவிமூலம் பயணச் சீட்டு வழங்கப்படும்

=============================================================

சென்னையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.
 
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு ரயில்பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

பயணிகளுக்கு விருப்பதின் பேரில் காப்பீடுகள் வழங்கப்படும். இது குறித்து காப்பீடு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது

பல்வேறு ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்யப்படும்

=============================================================

குழந்தைகளுக்கான உணவுகள் ரயில் நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பயணிகளுக்கு உள்ளூர் உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 
டிக்கெட் புக் செய்யவும், புகார்கள் தெரிவிக்கவும் ரயில் துறைக்காக இரண்டு தனி செயலிகள் [Application] உருவாக்கப்படும்.
 
முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்ய வசதி ஏற்படுத்தி தரப்படும்.
 
ரயில்வேயில் சுமை தூக்குவோர் இனி உதவியாளர் என அழைக்கப்படுவர்.

=============================================================

திருப்பதி, வேளாங்கன்னி, நாகை ஆகியவை ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இ-கேட்டரிங் சேவை 45 முதல் 408 ரயில் நிலையங்களில் அமைக்கப்படும்

நடப்பாண்டில் 100 ரயில்நிலையங்களில் wi- fi அமைக்கப்படும்

பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஸ்மாட் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும்

=============================================================

நடப்பாண்டிற்குள் 17 ஆயிரம் பசுமை கழிப்பறைக்குள் அமைக்கப்படும்.
 
மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில்  சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் மற்றும் ஆந்யோதையா எக்ஸ்பிரஸ் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும்.
 
சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 50 கிமீ வேகம் அதிகரிக்கப்படும்.
 
ரயில் நிலையங்களில் தேவையானவற்களுக்கு வெந்நீர் வழங்கப்படும்.
 
ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளை ஆன்-லைனில் புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
 
ரயில்களுக்கு தேவையான மின்சாரத்தை நேரடியாக கொள்முதல் செய்ய திட்டம்.

=============================================================

முக்கிய ரயில் நிலையங்களில் 20 ஆயிரம் திரைகள் (அறிவிப்பு திரைகள்) அமைக்கப்படும். 

கூட்ட நெரிசல் மிகுந்த ரயில் பாதைகளில் முன் பதிவு செய்யப்படாத அந்தயோதயா ரயில்கள் விடப்படும்

நீண்ட தூர பயணங்களின் முன்பதிவில் 2 முதல் 4 பெட்டிகள் அதிகரிக்கப்படும்.

=============================================================

முதியவர்களுக்கான கீழ் படுக்கை 120 வரை ஒதுக்கப்படும்

பார்கோடு தொழில் நுட்பத்துடன் முக்கிய ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கப்படும்

தண்ணீர், சார்ஜர் பாயிண்ட் கூடுதல் பெட்டிகளில் அமைக்கப்படும்

எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் ரயில் பெட்டி சுத்தம் செய்யப்படும்

=============================================================

வதோதராவில் உள்ள ரயில்வே அகாடமி பல்கலைகழகமாக மாற்றப்படும்.
 
முழுவதும் முன்பதிவு செய்யாத ரயில்கள் சாமானிய மக்களுக்காக இயக்கப்படும்.
 
நடப்பாண்டில் 311 ரயில் நிலையங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
எங்களது முயற்சிகள் அனைத்தும் எப்போதுமே பொதுமக்களுக்காவே இருந்து வந்துள்ளது.
 
நடப்பாண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

5 ஆண்டுகளில் நவீனமயமாக்க 8.5 லட்சம் கோடி செலவிடப்படும்

ரயில் நிலைய சுவர்கள் அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்படும்

=============================================================

நெரிசல் மிகுந்த பாதைகளில் 2 அடுக்கு ரயில்கள் அதிகாமா விடப்படும்.

மாநில அரசுடன் இணைந்து 6 புத்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

=============================================================

ரயில்வே பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோருவது இணையம் வழியாக மேற்கொள்ளப்படும். 
 
ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற 6 மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.
 
400 ரயில் ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி செய்யப்படும்.
 
ரயில்வே ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்காக தனி பல்கலைக்கழ அமைக்கப்படும்

டெல்லி முதல் சென்னை வரையிலான சரக்கு ரயில் பாதைக்கு முன்னுரிமை வழங்கப்படும்

மின்மயம் ஆக்கும் பணிகளுக்கு மாற்று வழியில் நிதி திரட்டப்படும்

=============================================================

இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் 475 ரயில் நிலையங்களில் 17 ஆயிரம் பயோ கழிவறைகள் மற்றும் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும்.
 
சென்னை -  டெல்லி இடையே சரக்கு ரயில் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
 
குறைவான ரயில் கட்டணத்தால் 30 ஆயிரம் கோடி இழப்பு.
 
மூத்த குடிமக்களுக்கான கீழ் படுக்கை வசதி 50 சதவீதம் அதிகரிக்கப்படும்.

இந்த ஆண்டு 1600 கிலோ மீட்டர் மின்மயம் ஆக்கப்படும். அடுத்த ஆண்டு இது 2000 கிலோ மீட்டராக இருக்கும்

ரயில்வே மேம்பாட்டிற்கு 124 எம்.பிக்கள் நிதியளிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது

=============================================================

1,780 தாணிங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படும்

40 ஆயிரம் கோடி செலவில் புதிய ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கம்

2020 க்குப் பிறகு ஆளில்லா லெவல் கிராஸிங் இருக்காது.

=============================================================

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வே உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்படுவதற்கு ரூ. 8.5 லட்சம் கோடி செலவு செய்யப்பட உள்ளது

ஆளில்லா லெவில் கிராசிங்கிங்கில் நவீன தொழில் நுட்பம் செய்யப்படும்

கடந்த ஆண்டைவிட 8,720 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தில் 100 சதவீத வெளிப்படைத்தன்மை இருக்கும்

=============================================================

அனைத்து கொள்முதல் திட்டங்களும் மின்மயமாக்கலாக [e-platform] மாற்றப்படும்.

ரயில்வேக்கு மத்திய அரசின் பட்ஜெட் நிதி 40 ஆயிரம் கோடியாக இருக்கும்

ரயில்வேயின் மொத்த வருவாயில் சரக்கு கட்டணம் பங்கு 67 சதவீதமாக உள்ளது.

=============================================================

நிதி திட்டங்களுக்கு நிறுவனசார் நிதி பயன்படுத்துவது என்ற புதிய வழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரயில் பயணிகளின் கட்டண மாணியத்தால் 30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்

=============================================================

2500 கிலா மீட்டர் அகலபாதை அமைக்கப்படும்

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 139 திட்டங்கள் செய்ல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ரெயில்வே பட்ஜெட்டில் 1.21 லட்சம் கோடி மூலதனம் செய்ய திட்டம்.

=============================================================

ரயில் பாதை அமைப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும்

ஒரு நாளைக்கு 7 கிலோமீட்டர் தூரம் ரயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்திய ரயில்வே துறை இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்சிக்கும் முதுகெலும்பாக இருக்கவேண்டும் என்று ஒருமுறை கூறினார்.

=============================================================

இந்த பட்ஜெட் ரயில்வே துறை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக இருக்கும்.

கடந்த நிதியாண்டைவிட ரயில்வே முதலீட்டை இருமடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது

அடுத்த நிதியாண்டில் 1,84000 கோடியாக ரூபாயாக வருவாயை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது

=============================================================

இந்த பட்ஜெட் ரயில்வே துறை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக இருக்கும்.

ரயில்வேயின் இயக்க விகிதம் 92 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

ரயில்வேயின் சேவைத்தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

சோதனையான காலத்தை ரயில்வே கடந்துகொண்டிருக்கிறது

=============================================================

இது என்னுடைய பட்ஜெட் அல்ல சாதாரண மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மக்கள் பட்ஜெட்

இந்த பட்ஜெட்டில் ரயில்வேயின் வருவாயை பெருக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

=============================================================

ரயில்வேயின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடரபுடையது.

ரயில்வேயின் தொலைநோக்கை நனவாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெறும் வகையில் தாயார் செய்யப்பட்டுள்ளது

பட்ஜெட் உரையைத்தொடங்கினார் சுரேஷ் பிரபு....

ரயில்வே பட்ஜெட் தாக்கல் குறித்து நாடு முழுவதும மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய ரயில்வே அமைச்சர் தாயாராகி வருகிறார்.
..............................................
நாடாளுமன்றத்திற்கு வந்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
..............................................
 
Share this Story:

Follow Webdunia tamil