Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டது 'பெண்கள் குரல்': ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு

ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டது 'பெண்கள் குரல்': ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு
, வியாழன், 11 அக்டோபர் 2018 (11:44 IST)
பெண்கள் இதுவரை தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை ‘மீ டூ’ இயக்கத்தில் பதிவு செய்து வருவதுக்கு ஐஸ்வர்யாராய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நடிகைகள், திரையுலகினர் மற்றும் மீடியாக்களில் உள்ளோர் இதுவரை தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை  #metoo ஹேஸ்டேக்கில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.

அண்மைக்காலமாக பிரபலமான பெருந்தலைகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக இந்திய சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘மீ டூ’ இயக்கத்தை ஐஸ்வர்யாராய் வரவேற்று உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“மீ டூ இயக்கம் நல்ல அறிகுறி.  பெண்கள் உரிமைக்கான ஒரு தொடக்கமாகவே இதை பார்க்கிறேன். சட்டப்படி தீர்வு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். பெண்கள் குரல் இப்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. இதற்கு ‘மீ டூ’ போன்ற சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன.

நான் எப்போதுமே பெண்கள் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறேன். எனது கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறேன். உலகம் குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்டது. எங்கே இருந்து பேசினாலும் சமூக வலைத்தளங்கள் எல்லோருக்கும் கொண்டு சேர்த்து விடுகின்றன. என்னை பொறுத்தவரை சர்ச்சையான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ்னா பெரிய புடுங்கி தான்: விஜய் ஆண்டனி