Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விண்வெளி முழுவதும் குப்பை: இதனால் என்ன பிரச்சனை?

விண்வெளி முழுவதும் குப்பை: இதனால் என்ன பிரச்சனை?
, புதன், 1 ஏப்ரல் 2020 (14:15 IST)
நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது.
 
அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. அவ்வாறான சுற்று வட்டப் பாதையில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. அதில் வெறும் 2000 பொருட்கள் மட்டுமே செயல்படுகின்றன. அதில் சில செயற்கைக்கோள்கள் நாம் தொலைத்தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் பிடித்தமான படங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுகிறது.
 
அதைத் தவிரப் பிற பொருட்கள் எல்லாம் ராக்கெட் ஏவுதலால் வந்த குப்பைகள். அதனால் என்ன பிரச்சனை? அந்த 5 லட்சம் பொருட்கள் என்பது நம்மால் கண்டுபிடித்து கூற முடிந்த பொருட்கள்; கண்டுபிடிக்க முடியாமல் பல இருக்கலாம்.
 
தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய சுற்று வட்டப் பாதையில் ஏதேனும் செலுத்துவதற்கு எளிதானதாகவே உள்ளது. இது நமக்கு ஒரு நல்ல செய்தியாகத் தெரியலாம். ஆனால் அங்குப் பூமிக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்த போக்குவரத்து கட்டுப்பாடும் இல்லை. அவற்றைச் சுத்தம் செய்வதற்கான எந்த ஒரு வசதியும் இல்லை.
 
எனவே இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால், நாம் மேப் பார்ப்பதற்கும், தொலைத் தொடர்பு வசதிகளுக்கும், வானிலையை தெரிந்து கொள்வதும் பாதிக்கப்படலாம். இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் நாம் இருக்கிறோம் ஆனால் தற்போது வரை இதற்கு எந்த தீர்வும் இல்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 ஆயிரம் பேரை அடைக்க சிறை தயார்! – பஞ்சாப் ஆணையர் எச்சரிக்கை!