Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இமயமலைக்கு காலகெடு நிர்ணயம்; வெறும் பாறைகளே மிஞ்சும்..

இமயமலைக்கு காலகெடு நிர்ணயம்; வெறும் பாறைகளே மிஞ்சும்..
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (15:46 IST)
இந்து குஷ் மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ள பனிமலைகளுக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு உடனடியாக நிறுத்தப்படவில்லையினில் இந்த பெரும் மலைகளில் மூன்றில் இரண்டு பங்கு பனி மலைகள் காணாமல் போகக்கூடும்.
 
உலகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் கட்டுக்குள் வைத்தாலும் கூட குறைந்தது ஒரு பங்கு மலை பகுதிகள் இருக்காது என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
பனிமலைகள்தான் இப்பகுதியில் உள்ள எட்டு நாடுகளில் வசிக்கும் 250 மில்லியன் மக்களுக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன. துருவப்பகுதிகளை தவிர உலகத்தில் அதிகப்படியான பனிக்கட்டிகள் கிடைப்பது இமயமலை மற்றும் இந்து குஷ் பகுதிகளில் உள்ள கே2 மற்றும் எவரெஸ்ட் மலை சிகரப்பகுதிகளில்தான்.
 
ஆனால் இந்த பனி மலை பிராந்தியம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் பாறைகளை கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும். ஏனெனில் உலகம் முழுவதும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
புவி வெப்பமயமாதல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக அடுத்த சில தசாப்தங்களிலேயே பனி மலைகள் உருகத்தொடங்கும்.
 
இந்தோ கேஞ்செட்டிங் பிராந்தியத்தில் அதாவது கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து கங்கை பிராந்தியம் உட்பட கிழக்கில் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரையிலான பெரும் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இது உலகில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள பிராந்தியங்களில் ஒன்று.
 
இந்த மோசமான காற்று காரணமாக பனி மலைகளின் நிலை மேலும் மோசமடையும். கருமை நிற கார்பன் மற்றும் தூசிகள் பனியின் மேல் படர்வதால் பனிக்கட்டிகள் உருகுவது துரிதமாகிறது. உலக வெப்பநிலையானது இரண்டு டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு அதிகரிக்கும் எனில் 2100-ல் பனி மலைகளில் பாதி கூட இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேன்சி நம்பர வாங்குறதுக்கு இத்தன லட்சத்தையா செலவு பண்றது!!