Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஷ்டமத்து சனி துவங்குவதால் கும்ப ராசி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

அஷ்டமத்து சனி துவங்குவதால் கும்ப ராசி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுமா?
சிம்மத்தில் இருந்த சனி கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கன்னிக்கு பெயர்ச்சியானதால் கும்ப ராசிக்கு அஷ்டமத்து சனி துவங்கியுள்ளது. இந்த ராசி உடைய பெண்கள் குறிப்பாக திருமணமான பெண்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என்றும், அடிக்கடி கருச்சிதைவு, கருப்பை கோளாறு ஏற்படக் கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர். இதுகுறித்து ஜோதிட ரீதியாக விளக்கம் தரவும்?

பதில்: கும்ப ராசிக்கு அஷ்டமத்து சனி ஏற்பட்டாலும் அதனால் அதிகளவில் பாதிப்பு ஏற்படாது. மகரம், கும்பம் ஆகிய 2 ராசிகளுமே சனிக்கு உரியது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகர ராசிக்காரர்கள் துயரத்தை அனுபவித்தார்கள். மகரத்தின் 8வது வீட்டில் (சிம்மம்) சனி அமர்ந்திருந்ததே அதற்கு காரணம். சனிக்கு சிம்மம் பகை வீடாகும்.

ஆனால் கும்பத்திற்கு 8வது வீடாக கன்னி வருகிறது. இது சனிக்கு நட்பு வீடு. யோகாதிபதி புதனின் வீடு. இதனால் அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மேலும் கன்னியில் உள்ள சனியை குரு பகவான் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறார். எனவே, கும்ப ராசிக்காரர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது.

மேலும் குருவின் நிலையைப் பொறுத்தே கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். டிசம்பர் 15 முதல் மே 3ஆம் தேதி வரை வரை கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு காலமாகும். அந்தக் காலத்தில் கும்ப ராசி பெண்களுக்கு கர்ப்பச் சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உடல்நலத்தில் கவனம் தேவைப்படும். அதேபோல் 2010 அக்டோபர், நவம்பர், டிசம்பரிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கணவர் ஜாதகத்தில் நல்ல தசா புக்தி நடக்கும் பட்சத்தில் கும்ப ராசிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பில்லை. குழந்தை நல்ல முறையில் பிறக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil