Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெனோபாஸ் எத்தனை வயதுவரை தொடர்வது இயல்பானது....?

மெனோபாஸ் எத்தனை வயதுவரை தொடர்வது இயல்பானது....?
மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிரது என்று அர்த்தம்.
50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன் மெமோகிராம் பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச்  செய்துகொள்ளவேணடும் 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால்  கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பதும் நல்லது.
 
மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோமாஸ் நேரத்திலும் வரும்.
 
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலி வரும் அந்த நேரத்தில் மாத்திரை எடுப்பது தப்பில்லை, அதே நேரம் எல்லா மாதமும் இப்படி  தலைவலி வருவதுதான் தவறு. இவ்வாறு தொடர்வது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என  பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
 
அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
 
இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே  உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும்  வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா...?