காமிராவின் கண்ணில் சிக்கிய விஜய் மல்லையா

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (12:37 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. போட்டியை காண ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த மல்லையா ஏ.என்.ஐ. செய்தியாளருடைய காமிராவின் கண்ணில் சிக்கினார்; இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமினில் உள்ளார்.மைதானத்தை விட்டு வெளியேறும் போது ஏ.என்.ஐ. செய்தியாளர் விஜய் மல்லையாவிடன் இந்தியா திரும்புவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து பேசிய விஜய் மல்லையா, நான் இந்தியா செல்வதை நீதிபதிதான் முடிவு செய்வார். கிரிக்கெட் விளையாட்டின் போது நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிப்பதில்லை எனக் கூறியபடி தனது சென்றார். இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் முக்கியக் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது

டெல்டா விசிட்: பாதியிலேயே திரும்பும் முதலமைச்சர்; என்ன காரணம்?

கஜாவைத் தொடர்ந்து அடுத்த ரெட் அலர்ட்? வெதர்மேன் ரிப்போர்ட்

கஜா புயல் நிவாரணம்: எங்கே சென்றார்கள் தமிழ்ப் போராளிகள்?

எல்லா வங்கிகளிலும் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திறக்கலாமா?

தொடர்புடைய செய்திகள்

மாணவனை பின்னிப் பெடலெடுத்த ஆசிரியர் ! அதற்கு கூலி கொடுத்த பெற்றோர்...

டெல்டா விசிட்: பாதியிலேயே திரும்பும் முதலமைச்சர்; என்ன காரணம்?

பருந்துக்கு பயிற்சி அளித்த சர்வதேச "மாரி" மெய்சிலிர்க்கும் புகைப்படங்கள்

நிவாரணப் பொருட்களை பேருந்தில் இலவசமாக எடுத்து செல்லலாம்

மூவர் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை பரபரப்பு விளக்கம்

அடுத்த கட்டுரையில்