சிவக்க சிவக்க சூப்பரான பீட்ரூட் ரசம் வைப்பது எப்படி?

தமிழர்களின் பாரம்பரியமான உணவு வகைகளில் ரசமும் ஒன்று. ஜீரண சக்தியை அதிகரிக்கும் ரசம் பல்வேறு வகைகளில் சமைக்கப்படுகிறது. அந்த வகையில் சுவையான பீட்ரூட் ரசம் எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பீட்ரூட், தக்காளி, வெங்காயம், சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு

பீட்ரூட்டை நன்றாக கழுவி மேல் தோலை சீவி விட்டு நறுக்கிக் கொள்ள வேண்டும்.

நறுக்கிய தக்காளி, பீட்ரூட்டுடன் சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

அடுப்பில் வாணலியை வைத்து அரைத்த விழுதுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

Various Source

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதை கொதிக்க வைத்த விழுதுடன் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லியை தூவினால் கமகம பீட்ரூட் ரசம் தயார்.

மாம்பழத்தோடு இதையெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க.!

Follow Us on :-