ஜில் ஜில் மாம்பழ மில்க் ஷேக் ஈஸியா செய்யலாம்!

கோடைக்காலம் வந்தாலே மாம்பழ சீசன் களைகட்டி விடும். சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை ப்ரெஷ்ஷாக ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து சாப்பிடுவது சுவையையும், ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. வீட்டிலேயே எளிதாக மாம்பழ மில்க்‌ஷே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மாம்பழம், பால், சர்க்கரை, வெண்ணிலா ஐஸ்க்ரீம், பாதாம், ட்ரை ப்ரூட்ஸ்

அல்பொன்சா, பங்கனபள்ளி போன்ற பெரிய மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீங்கி மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பாலை முழுவதும் உறைநிலையில் அல்லது முடிந்த அளவு குளிர்நிலையில் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாம்பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு உறைந்த அல்லது குளிர்நிலையில் உள்ள பால் மற்றும் சர்க்கரை சேர்த்து அடிக்க வேண்டும்

Various Source

பாதாமை நீட்டமாக சீவிக் கொள்ள வேண்டும். ட்ரை ப்ரூட்ஸ் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடித்து எடுத்த மாம்பழ மில்க்‌ஷேக்கை ஒரு கிளாஸில் ஊற்றி அதன் மீது ஒரு ஸ்கூப் வென்னிலா ஐஸ்க்ரீம் வைக்க வேண்டும்.

அதன்மேல் சீவிய பாதாம் மற்றும் ட்ரை ப்ரூட்ஸை தூவி விட்டால் குளுகுளு மாம்பழ மில்க்‌ஷேக் தயார்.

வெயிலை இதமாக்கும் குளுகுளு பஞ்சாபி லஸ்ஸி ஈஸியா செய்யலாம்!

Follow Us on :-