Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவின் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரசேகரராவ் அதிர்ச்சி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (07:30 IST)
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து அடுத்த ஐந்து ஆண்டுக்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள கடந்த 6ஆம் தேதி சட்டசபையை கலைக்க ஆளுனரிடம் பரிந்துரை செய்தார் அதனை ஆளுனரும் ஏற்றுக்கொண்டதால் தற்போது அவர் காபந்து முதல்வராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சந்திரசேகரராவ் அவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடிவெடுத்துள்ளன. கடந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இந்த முறை கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. மேலும் இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர வாய்ப்பு உள்ளதால் பலமான எதிர்க்கட்சி கூட்டணி அமைகிறது.

இதனால் மிக எளிதில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்திருந்த முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதால் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 90 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்றது என்பதும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பதஞ்சலி வழக்கு..! கைகூப்பி மன்னிப்புக் கேட்ட பாபா ராம்தேவ்...!!

ஆந்திர முதல்வர் மீது கல்வீசி தாக்குதல்..! துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் சன்மானம்..!!

400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓபிஎஸ்-க்கு வாக்களிக்க வேண்டும்: ஜே.பி.நட்டா

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. தேர்தல் முடிந்த பின் வழக்கு தொடருங்கள்..!

குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல்காந்தி? – வில்லேஜ் குக்கிங் சேனல் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments