Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (14:49 IST)
நடிகர் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சீமராஜா' வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

டி. இமான் இசையில் பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு  உள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சீமராஜா திரைப்படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் வெளியிட வாய்ப்புள்ளது. அவ்வாறு வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும். எனவே சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிட  தடை விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

"வல்லவன் வகுத்ததடா" திரை விமர்சனம்!

"ரூபன்" திரை விமர்சனம்

அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லாX 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்!

திவ்யா துரைசாமியின் கண்கவர் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments