லண்டனில் பிரபல பாலிவுட் நடிகைக்கு மெழுகுச் சிலை

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (12:03 IST)
லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தீபிகா படுகோன் மெழுகுச்சிலை நிறுவப்பட உள்ளதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோன் படுபிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஃபேஸ்புக் லைவ் மூலம் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகக் கூடத்தில், தனது மெழுகுச்சிலையை அடுத்த வருடம் நிறுவ  உள்ளதாகத் தெரிவித்தார். 
 
முதலில் லண்டனில் உள்ள கண்காட்சிக் கூடத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் நிறுவ உள்ளதாகக் கூறினார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும், அந்தக் குழுவினருடன் இருப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தான் மேடம்  டூஸாட்ஸ் அருங்காட்சியகம் சென்ற அனுபவம் பற்றிக் கூறும்போது, சிறு வயதில் தன் குடும்பத்தினருடன் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தை வரிசையில்  காத்திருந்தாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கே தனக்கு மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதற்காக, அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், சிலை வடிப்பதற்காக அவரை அளவு எடுத்துள்ளனர். அவரது முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை தீபிகா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் இந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்..! ஜோதிகா ஓபன்டாக்

மீண்டும் அஜித்திற்கு மகளான குழந்தை நட்சத்திரம்?

விஜய் 63 யும் திருட்டு கதையும் - அட்லீக்கு எதுக்கு இந்த பொழப்பு..?

என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது

விருந்துக்கு சென்று விருந்தாகிய இளம்பெண்: அயோக்கியனின் வெறிச்செயல்

தொடர்புடைய செய்திகள்

வைரலாகும் விஜய் சேதுபதியின் ஃபேமிலி செல்ஃபி!

அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸுக்கும் வந்தாச்சு சென்ஸார்?

மெசேஜ்களால் நிறைந்த செல்போன் - இன்ப மழையில் நனைந்த மாதவன்

பிரசாந்த்தின் ‘ஜானி’ படத்தின் டிரெய்லர் வெளியானது

அடுத்த கட்டுரையில்