Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்!

வயாகரா மாத்திரை அந்த விஷயத்துக்கு மட்டுமல்ல இதுக்கும் நல்லதாம்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (14:29 IST)
ஆண்களின் பாலின உணர்வை தூண்டி உடலுறவுக்காக பயன்படுத்தப்படும் வயாகரா மாத்திரை இதயத்துக்கு நல்லது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


 
 
பிரபல விஞ்ஞானி அண்ட்ரூ டிராஃபோர்ட் வயாகரா குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார். அதில் வயாகரா உபயோகிப்பதால் ஆண்களின் அந்தரங்க உறுப்புக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து செக்ஸ் வாழ்க்கையை வலுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரையை கொடுத்து பரிசோதித்ததில் அவர்களின் இதயம் சாதரணமானவர்களை விட சீராக இயங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 
வயாகரா மாத்திரையில் உள்ள  பி.டி.இ. 5 என்ற வேதிப்பொருள் மாரடைப்பை தடுப்பதாக கூறப்படுகிறது. இது முக்கிய என்சைம்களை தடுத்து, மிக மெலிதான திசுக்களை விரிவடையாமல் தடுக்கிறது.
 
இந்த ஆய்வு குறித்து கூறிய அண்ட்ரூ டிராஃபோர்ட், வயாகரா மாத்திரைகள் பொதுவாக விறைப்புத் தன்மை செயலிழப்பது தொடர்பான சிகிச்சைக்கு வழங்கப்படும். இது இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. வயாகரா போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் நோயாளிகளில், மாரடைப்பால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்துள்ளது என்றார்.

மாஸ்கோ துப்பாக்கிச் சூடு நடந்த 14 மணி நேரத்தில் 4 குற்றவாளிகள் கைது - ரஷ்யா அறிவிப்பு

காசாவில் போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானம் UNSC-ல் நிறைவேற்றம்

IPL-போட்டிக்கு என சிறப்பு பேருந்துகள்- சென்னை MTC அறிவிப்பு

மத்திய அரசிற்கு எதிரான வழக்கு தொடர இருக்கிறோம் -முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்- முதல்வர்

அடுத்த கட்டுரையில்