ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (10:00 IST)
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய உலகக் கோப்பை போட்டியில், பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
 
அடுத்த படியாக அவர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கு பெற்று விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சிந்து ஜப்பான் வீராங்கனை சயகா தகஹாஷியை எதிர்கொண்டார்.  
 
56 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21–17, 7–21, 21–13 என்ற நேர் செட் கணக்கில் சயகா தகஹாஷியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் சிந்து சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்ள இருக்கிறார்.

புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு வெற்றி

புரோ கபடி போட்டி: ஹரியானா, டெல்லி அணிகள் வெற்றி

மிடில் ஆர்டர் பிரச்சனை; ரோகித், கோஹ்லி இடங்கள் பறிபோக வாய்ப்பு

கஜா புயல் : எந்த முன்னணி நடிகரும் செய்யாததை செய்துள்ள சிம்பு - வைரல் வீடியோ

எழும்பூரில் சிக்கியது இந்த கறிதானா..? ஆய்வில் தகவல்

தொடர்புடைய செய்திகள்

விஸ்வரூபம் எடுக்குமா இந்திய அணி..? நாளை செகண்ட் 20- 20

வெற்றி பெறுவோம் என நினைத்தோம் : கோலி

11 ஆயிரம் ரன்கள் அடித்து இந்திய வீரர் சாதனை...

கடைசி ஓவரில் சொதப்பிய இந்தியா: ஆஸ்திரேலியா வெற்றி

டாஸ் ஜெயித்த இந்திய அணி பவுலிங் ... போட்டியில் வெல்லுமா...?

அடுத்த கட்டுரையில்