கூடங்குளம் அணு உலை விபத்து குறித்து சுப.உதயகுமார் பேட்டி

வீரமணி பன்னீர்செல்வம்
புதன், 14 மே 2014 (18:02 IST)
அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் உள்ளன என்ற குற்றச்சாற்றை ஆரம்பம் முதல் நாங்கள் கூறி வந்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் அணு உலையில் உள்ள வெந்நீர் குழாய் வெடித்து 6 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே, கூடங்குளம் அணு உலை தொடர்பாக சார்பாற்ற அறிவியல் குழு விசாரணை நடத்த வேண்டும். இதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளோம்.
 
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த சமயத்தில் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அணு உலை நிர்வாகமே அறித்திருப்பதைப் பார்க்கும்போது செயல்படாத அணு உலையை இழுத்து மூடுவதற்கான நாடகமாகத்தான் தெரிகிறது.
 
ஒவ்வொரு முறையும் 700 வாட் மின்சாரம் வருகிறது; 800 வாட் மின்சாரம் வருகிறது; 900 வாட் மின்சாரம் வருகிறது என்று எழுத்து மூலமும், வாய் மூலமும் கூறிவந்த நிர்வாகம் தற்போது அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து வெளிப்படையாகக் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
 
அணுசக்தி துறையின் இந்த செயல்பாடுகளெல்லாம் இயங்காத அணு உலைக்கான நொண்டி சாக்காகத்தான் தெரிகிறது.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹரிபூர் அணு உலையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அதேபோல் நீங்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது, ஹரிபூர் அணு உலை துவங்கும் நிலையில் உள்ளது. ஆனால் கூடங்குளம் அணு உலை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் கூடங்குளம் அணு உலையின் 2வது, 3வது யூனிட்கள் இன்னும் முடிவடையவில்லை. முதல் அணு உலையிலும் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த சூழ்நிலையில், திமுக, சிபிஅய், சிபிஎம் ஆகிய முக்கிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த விபத்து தொடர்பாகவும் சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்.
 
அங்கே அணு உலை இயங்கவும் இல்லை. மின்சாரம் தயாரிக்கவும் இல்லை. அப்படி அங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றால் அந்த மின்சாரம் எங்கே போகிறது, எந்த மின் இணைப்புகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 
இந்த விபத்தைக் காரணம் காட்டி ஒரு நாடகம் நடத்தி தப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கப்படவில்லை. ஜெயலலிதா அவர்கள் திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 45 நிமிடம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை குறித்துப் பேசினார். ஆனால் அப்போது இந்த மின் பற்றாக்குறையைப் போக்க கூடங்குளத்திலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்று குறிப்பிடவோ, பேசவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூடங்குளம் போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் பேசினார்.

மடியில் மகன், கழுத்தில் தாலி! சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்

ரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா! வீழுமா ஜியோ...?

போச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ!!

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

தினேஷ் கார்த்திக்கைக் கழட்டிவிட்ட பிசிசிஐ – ஆதரவு அளித்த ரசிகர்கள் & முன்னாள் வீரர்கள் !

யார் யாருக்கு எங்கெங்கு எத்தனை? தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி

நைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா?

புல்வாமா தாக்குதலை பாராட்டிய பன்னாட்டு நிறுவன ஊழியர் பணியிடை நீக்கம்!

புல்வாமா தாக்குதல்: 44 பேரை கொன்றவனை போராட்ட வீரனாக்கிய பாகிஸ்தான் ஊடகங்கள்

பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்தா ? – தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம் !