கரூர் அருகே பாமக கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (18:26 IST)
கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியனை பகுதி பேருந்து நிருத்தத்தில் பா.ம.க கொடிக்கம்பம் நடப்பட்டு பலகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த வழியாக பா.ம.க தாந்தோன்றி நகர செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான வெள்ளியனைக்கு சென்றுள்ளார். அவ்வாறு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்ப வருகையில் அங்கு நடப்படிருந்த பா.ம.க கொடிக்கம்பத்தினை காணவில்லை.இதனை சந்தேகமடைந்த நகர செயலாளர் ராஜா அருகில் உள்ள வெள்ளியனை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் வெள்ளியனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்களால் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்படிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா கரூர் மாவட்ட பா.ம.க மாநில துணை பொதுசெயலாளர் பி.எம்.கே.பாஸ்கரனை தொடர்பு கொண்டு வெள்ளியனையில் நடந்ததை கூறியுள்ளார். இதனிடையே வெள்ளியனை பகுதிக்கு விரைந்த பா.ம.க மாவட்ட தலைவர் ஐ.எம்.பாபு. , ஒன்றிய செயலாளர் முத்து மற்றும் துணைச்செயலாளர் வரதன் வெள்ளியனை காவல் நிலையத்திற்க்கு வந்து நடந்ததை புகாராக காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாபரிடம் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டதில் கொடிக்கம்பத்தினை எதற்க்காக வெட்டி சாய்தனர் என்றி விசாரித்து சம்மந்தப்பட்ட நபர்களை எச்சரித்துவிட்டு அவர்களிடம் இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்க்கிக்கொண்டனர். பின்னர் பா.ம.க கொடிக்கம்பம் அதே இடத்தில் வர்ணம் பூசப்பாட்டு நடப்பட்டது. இதனால் அங்கு சற்று பதட்டமான சூழல் நிலவியது.

பேட்டி - ஐ.எம்.பாபு  - பா.ம.க கரூர் மாவட்ட தலைவர்

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்

100 ரூபாய் கேட்ட போலீஸ்: கத்தியை காட்டிய இளைஞர்; அதிர்ந்துபோன காவலர்கள்

பெரியாரை அவமதித்த ஹெச் ராஜாவுக்குப் பதிலடி தந்த ஆ ராசா….

என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது

அடிவயிற்றில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைத்து தட்டையான வயிற்றை பெற....!

1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: சென்னையில் பெரும் பரபரப்பு

தொடர்புடைய செய்திகள்

கமலுக்கு இருக்கும் அறிவு, தெளிவு ரஜினிக்கு இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு: ஏன் தெரியுமா?

திருப்தி தேசாயை திருப்பி அனுப்பிய ஐயப்ப பக்தர்கள்: கொச்சியில் பரபரப்பு

மீண்டு(ம்) வந்த ஜாவா பைக்குகள் –ஜாவா பிரியர்கள் மகிழ்ச்சி

நாளை முதல் ரயில்கள் வழக்கம்போல் ஓடும்: தென்னக ரயில்வே

அடுத்த கட்டுரையில்